அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > 2021இல் பள்ளிகளில் கருப்புக் காலணி அமல்படுத்தப்படும்
சமூகம்முதன்மைச் செய்திகள்

2021இல் பள்ளிகளில் கருப்புக் காலணி அமல்படுத்தப்படும்

கோலாலம்பூர், அக்.13
2021ஆம் ஆண்டு தொடங்கி நாட்டின் அனைத்து ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் கருப்பு நிறக் காலணி அணிவது அமல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விதிமுறையை 2020இல் விரிவுப்படுத்துவதற்கு அடுத்த ஆண்டில் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும்.

இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்கள் வெள்ளை நிறக் காலணி அணிவதற்கும் அனுமதியளிக்கப்படும் என்று ஓர் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.

அதோடு மட்டுமின்றி இந்தக் காலக் கட்டத்தில் மாணவர்களைக் கருப்பு நிறக் காலணி அணியும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளி நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதில் வெள்ளை நிறக் காலணியை அணிய மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டு வரை கால அவகாசம் இருப்பதால் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு அவசர அவசரமாக கருப்பு நிறக் காலணியை வாங்கிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சு மேலும் கூறியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன