அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > உணவகங்களில் புகைப்பிடிக்கத் தனி இடம்; பரிந்துரை நிராகரிப்பு
முதன்மைச் செய்திகள்

உணவகங்களில் புகைப்பிடிக்கத் தனி இடம்; பரிந்துரை நிராகரிப்பு

கோலாலம்பூர், அக்.13
அடுத்தாண்டு ஜனவரி தொடங்கி அனைத்து உணவகங்களிலும் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் உணவகங்களில் சிகரெட் புகைக்க தனி இடம் ஒதுக்கலாம் என உணவக உரிமையாளர்கள் முன்வைத்தப் பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பொது இடங்களில் மக்களின் ஆரோக்கியத்திற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, இப்பரிந்துரையை ஏற்றுக் கொள்ள முடியாது என சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

புகைப்பிடிப்பவர்கள் வேறு வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது குளிர்சாதன வசதியுள்ள உணவகங்களிலும் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இத்தடை விரிவுப்படுத்தப்படுகிறது.

இந்தத் தடைகளை மீறி புகைப்பிடிப்பவர்கள் மீதும் உணவக உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லீ பூன் சாய் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன