வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 4 மாததிற்குள் துன் மகாதீரின் பயணச் செலவு வெ. 63 லட்சம்!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

4 மாததிற்குள் துன் மகாதீரின் பயணச் செலவு வெ. 63 லட்சம்!

கோலாலம்பூர், அக். 15 –

பக்காத்தான் ஆட்சிக்கு வந்த பின்னர், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரின் குழுவினர் மேற்கொண்ட 8 வெளிநாட்டுப் பயணங்களுக்கு மொத்தம் வெ. 63 லட்சம் செலவானதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் துறை அமைச்சரான லியூ வுய் கியோங் இந்தச் செலவுகள் யாவும் 1980ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்திற்கு இணங்கவே இருப்பதாகத் தெரிவித்தார்.

அந்தச் செலவில் பிரதமருடன் உடன் சென்ற அதிகாரிகளின் செலவும் அடங்கியிருப்பதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்ற பின்னர், டாக்டர் மகாதீர் இந்தோனேசியா, சீனா, புரூணை, அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஜப்பானுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன