புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஸ்பெயினை சொந்த அரங்கில் பந்தாடியது இங்கிலாந்து !
விளையாட்டு

ஸ்பெயினை சொந்த அரங்கில் பந்தாடியது இங்கிலாந்து !

செவியா, அக்.16-

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இங்கிலாந்து, 3 – 2 என்ற கோல்களில் ஸ்பெயினை வீழ்த்தி அதிரடி படைத்துள்ளது. ஸ்பெயினை அதன் சொந்த அரங்கில் வீழ்த்தியதன் மூலம், நவீன கால்பந்து உலகில் இங்கிலாந்து மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கால்பந்து அணியின் வரலாற்றில் மிகவும் இளம் அணியாக கருதப்படும் ஓர் அணியை நிர்வாகி கேரத் செளத்கேட் களத்தில் இறக்கியிருந்தார். எனினும் கேரத் செளத்கேட் ஆட்டக்காரர்கள் அனுபவம் வாய்ந்த ஸ்பெயின் அணியை திக்கு முக்காட வைத்துள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டில் இங்கிலாந்து 5 – 1 என்ற கோல்களில் ஜெர்மனியை வீழ்த்தியதே அந்த அணியின் சிறந்த சாதனையாக கருதப்பட்டது.எனினும் அந்த வெற்றியைக் காட்டிலும் ஸ்பெயினுக்கு எதிரான வெற்றி ஓர் இனிமையான வெற்றியாக கருதப்படுகிறது.

லுவிஸ் என்ரிக்கே பயிற்றுனர் பொறுப்பை ஏற்றது முதல் ஸ்பெயின் அணி அனைத்துலக ஆட்டங்களில் கோல் மழைப் பொழிந்து அதிரடிப் படைத்தது. அந்த அணியின் வேகத்தை இங்கிலாந்தின் இளம் அணி தற்போது கட்டுப்படுத்தியுள்ளது. முதல் பாதி ஆட்டத்தில் ரஹீம் ஸ்டேர்லிங் அடித்த இரண்டு கோல்களில் இங்கிலாந்து 2- 0 என முன்னணிக்கு சென்றது.

இரண்டாம் பாதியில் மார்கோஸ் ராஷ்போர்ட் கோல் இங்கிலாந்து அணியின் நிலையை மேலும் வலுப்படுத்தியது. பாக்கோ அல்சேசார், செர்ஜியோ ராமோஸ் இரண்டு கோல்களைப் போட்டிருந்தாலும் இறுதி வரை தாக்குப் பிடித்த இங்கிலாந்து 3 – 2 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன