புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை !
முதன்மைச் செய்திகள்

21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை !

கோலாலம்பூர், அக்.16 –

21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மதுபானம் விற்க இன்று முதல் சுகாதார அமைச்சு தடை விதித்திருக்கிறது. இதற்கு முன்னர், மதுபானங்களை வாங்குவோருக்கான  வயது வரம்பு  18 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1985-ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ் அரசாங்கப் பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைக்கு ஏதுவாக, இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு நடைபெற்ற 63-வது அனைத்துலக சுகாதார மாநாட்டில், சுகாதார அமைச்சு, சந்தையில் மதுபான விற்பனையை குறைக்கும் தொடர்பில் செய்துக் கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில், அந்த விதிமுறையில் திருத்தம் செய்யப் பட்டதாக டாக்டர் சுல்கிப்ளி கூறினார்.

செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக்கூட்டத்தில், அவர் இவ்வாறு கூறினார்.

361 மற்றும் 386A விதிமுறைகளைப் பின்பற்றாத வியாரிகளுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன