வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > 50 தமிழ் அலைவரிசைகளை அறிமுகப்படுத்துகிறது கூஃபிலிக்ஸ்!
கலை உலகம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

50 தமிழ் அலைவரிசைகளை அறிமுகப்படுத்துகிறது கூஃபிலிக்ஸ்!

கோலாலம்பூர், அக். 16-

மலேசிய கலை சார்ந்த ரசிகர்களுக்காக 50 தமிழ் தொலைக்காட்சி, செய்தி, இசை நிகழ்ச்சி, வானொலி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகின்றது கூஃபிலிக்ஸ். மலேசியாவில் உள்ள தமிழர்களும் முழுமையாக பொழுது போக்கு அம்சங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் கூஃபிலிக்ஸ் தொலைபேசி ஆப்ஸ், இணையத்தள ஒருங்கிணைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்படுவதாக அதன் இயக்குநர் டத்தோ கார்த்திக் கூறினார்.

கூஃபிலிக்ஸ் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஒரே தளத்தில் தருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கனடா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இந்த தளத்தில் காணலாம். கூஃபிலிக்ஸ் தளம் கூகேன் மலேசிய நிறுவனத்தின் கீழ் மலேசிய தொடர்பு பல்லூட ஆணையத்தின் அதிகாரத்தைப் பெற்று செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூஃபிலிக்ஸ் தளத்தை கைப்பேசியில் இணைத்துக் கொள்ளலாம். அல்லது வீட்டிலும் டெக்கோடர் மூலம் பார்க்கலாம். இந்த டெக்கோடர் செட்டில் ஒரு ரிமோர்ட் கோன்ட்ரோல், எச்.டி.எம்.ஐ. கேபல், அது சார்ந்த பல இலவசப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இந்த டெக்கோடரை வீட்டில் உள்ள தொலைக்காட்சியுடன் பொருத்தி விட்டால் கைப்பேசியில் உள்ள இணையச் சேவையை கூஃபிலிக்ஸுடன் இணைத்துக் கொண்டு 24 மணி நேரமும் இடைவிடாத பொழுது போக்கு நிகழ்ச்சியை மலேசியர்கள் காணலாம் என டத்தோ கார்த்திக் கூறினார்.

வீட்டில் இணைய வசதி கொண்டவர்கள் இந்த டெக்கோடரில் அதை இணைத்துக் கொள்ளலாம். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த 50 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் குறைந்த இணைய பயன்பாட்டில் காணமுடியும் என்றார் அவர். இன்று மலேசியர்கள் இணைய சேவையை பெரும் அளவு பயன்படுத்துகின்றார்கள். இன்னும் சில ஆண்டுகளில் கைப்பேசியில் இணையச் சேவையின் மூலம் அனைத்து நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் காணக்கூடிய சூழ்நிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு கூஃபிலிக்ஸ் சிறந்த தேர்வு என அவர் நினைவுறுத்தினார்.

கூஃபிலிக்ஸ் சேவையை பொறுத்தவரை தமிழ் நாட்டில் ஒளியேறும் நிகழ்ச்சிகளை அதேநேரத்தில் இங்கு காணலாம். அதோடு ஒன் எஸ்.டி.பி., எஸ்.டி.வி.1, தமிழன் 24, நவா டிவி உட்பட வானொலி நிலையங்களில் நேரடி ஒளிபரப்பையும் கேட்க முடியும். வரும் காலத்தில் பஞ்சாபி சமூகத்தின் டேசி மியூசிக், சி.எம்.ஆர்.எப்.எம். உட்பட தமிழ் எச்.டி.சேவைகளை கூஃபிக்ஸ் வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய இந்தியர்கள் செய்திகளுக்கு மிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். அதனால் 8 தமிழ்ச் செய்திகள் இந்த அலைவரிசையில் இடம் பெற்றுள்ளன. அதேபோல் இசைப்பிரியர்களுக்காக 7 இசை குறிப்பாக பாடல்கள் உள்ளடக்கிய அலைவரிசையும் உள்ளது. கூஃபிலிக்ஸ்சைப் பொறுத்தவரை கடுமையான மழைக்காலத்திலும் எந்த தடையும் இன்றி நிகழ்ச்சிகளை காணலாம் என கார்த்திக் கூறினார்.

வரும் காலத்தில் கூஃபிக்ஸ் உள்ளூர் தயாரிப்புகளை உருவாக்கவும் எண்ணம் கொண்டுள்ளது. மலேசிய கலைஞர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்தும் தளமாகவும் கூஃபிலிக்ஸ் விளங்கும். நமது நிகழ்ச்சிகளையும் இந்த அலைவரிசையின் மூலம் உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் காண வாய்ப்புள்ளது என்றார் அவர். கூஃபிக்ஸ் டெக்கோடரைப் பெற ஆண்டிற்கு 1 முறை 399 வெள்ளி சிறப்புச் சலுகையாக வழங்கப்படுகின்றது. 1 ஆண்டுக்கு இந்த அலைவரிசையை வாடிக்கையாளர்கள் பார்க்கலாம்.

கூஃபிலிக்ஸ் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 50 திரைப்படங்களை காணலாம். இந்த கூஃபிலிக்ஸ் தளத்தில் ஜெயா டிவி, இமயம், ஜெயா மூவிஸ், கலைஞர் டிவி, கலைச்சோலை, கிங் டிவி, எம்.ஜி.ஆர்.டிவி, பெப்பர்ஸ் டிவி, பெலிமார் டிவி, புதுயுகம் டிவி, ராசி டிவி, ரோஜா டிவி போன்ற முன்னணி அலைவரிசைகள் உள்ளன. அதோடு ஆன்மிகவாதிகளுக்கான சாய் டிவியும் இதில் உள்ளது.

அதோடு 7எஸ் மியூசிக், இசை அருவி, ஜெவ்னா டிவி, ஜெயா மெக்ஸ், நவா டிவி, சஹானா, டியூன்ஸ் 6 ஆகியவற்றின் மூலம் பாடல்கள் அலைவரிசையில் பார்க்கலாம். கேப்டன் நியூஸ், ஜெயா பிளஸ், கலைஞர் செய்திகள், லோட்டஸ் நியூஸ், நியூஸ் 7, பெலிமார் நியூஸ், புதிய தலைமுறை, ஸ்கைய் 1 மூலம் செய்திகளையும் இதன் வாடிக்கையாளர்கள் பெறலாம் என கார்த்திக் நம்பிக்கை தெரிவித்தார்.

விவேக கைப்பேசியில் பிலே ஸ்டோர், ஆப்பில் ஸ்டோரில், KOOCAN என பதிவு செய்து இந்த தளத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் கூஃபிலிக்ஸ் சந்தாதாரர்களாக தங்களை இணைத்துக் கொண்டு இந்த 50 அலைவரிசையையும் கண்டுகளிக்கலாம் என டத்தோ கார்த்திக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன