அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > வரலாற்றில் முதல் முறையாக ஆர்.டி.எம்.மில் 11 பேருக்கு பதவி உயர்வு
சமூகம்முதன்மைச் செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக ஆர்.டி.எம்.மில் 11 பேருக்கு பதவி உயர்வு

கோலாலம்பூர், ஆக. 11-

ஆர்.டி.எம். வரலாற்றில் முதல் முறையாக 11 இந்திய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஒளிபரப்புத் துறையிலும் இந்த 11 பேரும் தங்களின் நியமனங்களை வரும் ஆக்ஸ்ட் 15ஆம் தேதி ஏற்றுக் கொள்கிறார்கள்.

பார்வதி சுப்ரமணியம், ரோஹினி சுப்ரமணியம், ராதா வெங்கடாசலம், ராஜேஸ்வரி ராஜமாணிக்கம், ஷாமளா தேவி அமிர்தராஜ், வனஜா ராஜன், கிருஷ்ணமூர்த்தி, ரேகா பாலசந்திரன், தவமலர் தேவி முனுசாமி, மனோகரன் கோவிந்தராஜூ, அந்தோணி இன்னாசி ஆகியோர்தான் பதவி உயர்வு கிடைத்தவர்கள்.

இதில் ராஜேஸ்வரி ராஜமாணிக்கம் மின்னல் எப்.எம்.மின் அறிவிப்பாளராக இருந்து, தற்போது வானொலி செய்திப் பிரிவில் பணியாற்றுகிறார். அதேபோல் பார்வதி சுப்ரமணியம் தற்போது டிவி 2இன் தமிழ்ச்செய்தி பிரிவின் பொறுப்பாளராக இருக்கின்றார்.
இவ்வேளையில் மின்னல் பண்பலையில் முன்பு ஒரு துணை நிர்வாகியாக இருந்த இடம் தற்போது இரு துணை நிர்வாகிகளான விரிவாக்கம் காண்கின்றது. ஒரு துணை நிர்வாகி மின்னல் பண்பலையின் நிர்வாக பொறுப்புகளையும் மற்றொருவர் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தையும் கவனிப்பார். அந்த இரு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அதிகாரிகளின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இதனிடையே மின்னல் பண்பலையில் துணை நிர்வாகியாக இருந்த சுமதி வரும் 15ஆம் தேதி வானொலி தமிழ் செய்தி பிரிவின் பொறுப்பாளராக பதவியேற்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன