ருவாண்டா, அக்.17-

லிவர்பூல் கால்பந்து கிளப்பின் முன்ன்ணி நட்சத்திரமான நாபி கெய்தா , கினி தேசிய கால்பந்து அணியுடனான ஆட்டத்தின்போது காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணிக்கு தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆப்ரிக்க கிண்ண கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் கினிக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான ஆட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நாபி கெய்தாவுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதை கினி கால்பந்து அணியின் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் அந்த காயம் குறித்து அவர் மேல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார். ருவாண்டாவுக்கும் கினிக்கும் இடையிலான ஆட்டம் 1 – 1 என்ற கோல்களில் முடிந்தது.  லிவர்பூல் அணியைச் சேர்ந்த மூன்று ஆப்ரிக்க ஆட்டக்காரர்கள் இந்த வாரத்தில் காயம் அடைந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை லிவர்பூல் கோல் மன்னன், முஹமட் சாலா, சுவாசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் காரணமாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சூடானுக்கு எதிரான ஆட்டத்தின்போது சாடியோ மானே காயம் அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.