புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 1எம்டிபியின் 5.03 கோடி டாலர் கடன் செலுத்தப்பட்டு விட்டது!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

1எம்டிபியின் 5.03 கோடி டாலர் கடன் செலுத்தப்பட்டு விட்டது!

கோலாலம்பூர், அக்.18-

1எம்டிபி நிறுவனத்தின் 5.03 கோடி டாலர் கடனை அரசு செலுத்தி விட்டது என நிதியமைச்சர், லிம் குவான் எங் தெரிவித்தார்.

இதில் இந்த ஆண்டு மட்டும் 1எம்டிபி கடனுக்கு வெ.168.8 கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது. இது ஒன்றும் சிறு தொகையல்ல.

இதைத்தான் மக்களும் அரசும் ஏற்க வேண்டியுள்ளது என நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குவான் எங் குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த செப்டம்பரிலிருந்து வரும் நவம்பர் மாதம் வரை வெ.81.21 கோடி வட்டித் தொகையை 1எம்டிபி நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இதில் இவ்வாண்டு இறுதிக்குள் இந்த வட்டித் தொகை 2 தவணைகளாக அரசு செலுத்தி விடும். அந்த வகையில் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெ.21.7 கோடி செலுத்தப்படவிருக்கும் வேளையில், 15.35 கோடியை இவ்வாண்டிலேயே செலுத்தி விட வேண்டியது அவசியமாகும்.

இந்த 1எம்டிபி கடனால் உலகம் முழுதும் பலரால் விமர்சிக்கப்பட்டதுதான் உண்மை என்று ஜசெக தலைமைச் செயலாளுமான குவான் எங் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன