வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஸாஹிட்டை ஆதரிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜீப்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸாஹிட்டை ஆதரிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜீப்

கோலாலம்பூர், அக். 20
நிதி மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு ஆதரவு தெரிவிக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நீதிமன்றம் வந்திருந்தார்.

இன்று காலை 9.20 மணியளவில் தமது தோயோத்தா வெல்பையர் காரில் வந்திருந்தபோது, அவர் பத்திரிகையாளர்களிடம் புன்னகையுடன் கையசைத்து நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தார்.

ஸாஹிட் மீது 2001ஆம் ஆண்டு அம்லா எனப்படும் கள்ளப்பணத் தடுப்பு, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியிதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம், 2009ஆம் ஆண்டு மலேசியா ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் மற்றும் நம்பிக்கை மோசடி குற்றங்கள் உடபட 45 குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.

ஸாஹிட்டின் குடும்பம் நடத்திவரும் யயாசான் அக்கால் பூடி எனும் அறக்கட்டளை சம்பந்தமான நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக அவரின் மீது குற்றம் சுமத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன