வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பினாங்கு நிலச்சரிவில் நால்வர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
முதன்மைச் செய்திகள்

பினாங்கு நிலச்சரிவில் நால்வர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்

ஜோர்ஜ்டவுன், அக் 20
புக்கிட் கூகுஸ், இரட்டை நெடுஞ்சாலை கட்டுமான தளத்தில் நிகழந்த நிலச்சரிவில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இதுவரை மண்ணில் புதையுண்ட 4 பேரை மீட்புத் துறையினர் கண்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு மற்றும் மீட்புப் பிரிவின் நடவடிக்கை கொமண்டர் மோர்னி மாமாட் தெரிவித்தார்.

இந்தக் கட்டுமானத் தளத்தில் பணியாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தப் போது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் காணாமல் போன நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து தேடும் பணியில் மீட்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சாடோன் மொக்தார் தெரிவித்தார்.

இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் இருவர் இந்தோனேசியர்கள், ஒருவர் வங்களா தேசத்தை சேர்ந்தவர்கள் மேலும் ஒருவர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன