வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மின் கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தாது – யோ பி யின் !
முதன்மைச் செய்திகள்

மின் கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தாது – யோ பி யின் !

கோலாலம்பூர், அக்.20

நாட்டில், தற்போது மின்சார கட்டணத்தை  உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என  எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் யோ பி யின் தெரிவித்துள்ளார்.  எனினும் ம்க்கள் சிக்கனத்துடன் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள், மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துவதற்காக, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு, மின் உற்பத்தியாளர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர் . ஆனால், அத்தகைய பரிந்துரைகள் பொருத்தமானவையல்ல என்று யோ பின் யின் தெரிவித்தார்.

மின் உற்பத்தியாளர்களை தாம் சந்திக்கும் போதெல்லாம் அத்தகையப் பரிந்துரைகளை முன்வைத்து வருவதாக, கோலாலம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது அமைச்சர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன