வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் 1 எம்.டி.பி பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் – லிம் கிட் சியாங் !
முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் 1 எம்.டி.பி பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் – லிம் கிட் சியாங் !

நீலாய், அக்.20-

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகள், தாங்கள் பெற்ற ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என  டி.ஏ.பி கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். இதன் வழி அரசாங்கம் அந்த பணத்தை மீண்டும் மக்களிடமே ஒப்படைக்க முடியும் என்று அவர் சொன்னார்.

2013 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து தேர்தல் நிதியைப் பெற்றிருப்பதாக ம.சீ.ச-வின் முன்னாள் தலைவர் டத்தோ ஶ்ரீ சுவா சொய் லேக் , இணைய செய்தி தளம் ஒன்றின் பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளதை லிம் கிட் சியாங் சுட்டி காட்டினார்.  13 ஆவது பொதுத் தேர்தலின்போது ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து 47 கோடி ரிங்கிட்டை நஜிப் தேர்தல் நிதியாக , தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளிடம் வழங்கினார் என ஓர் இணைய செய்தி பக்கம் குறிப்பிட்டிருந்தது.

இதில் ஒரு கோடியே 70 லட்சம் ரிங்கிட் ம.சீ.ச-விடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த பணம் 1 எம்.டி.பி நிறுவனத்தில் இருந்து வந்த பணம் என்பது தமக்கு தெரியாது என சுவா சொய் லேக் தெரிவித்திருந்தார். ஒரு தந்தை தமது மகனிடம் பணம் கொடுக்கும்போது அது எவ்வாறு வந்தது என தம்மால் கேட்க முடியாது என சுவா சொய் லேக் விளக்கம் அளித்திருந்தார்.

எனினும் சுவாவின் விளக்கத்தை தம்மால் ஏற்று கொள்ள முடியாது என லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். அந்த பணம் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால் , அதனை நஜிப்பிடம் நேரடியாக கேட்டிருக்க வேண்டும் என லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

நஜிப்பிடம் இருந்து தேர்தல் நிதியைப் பெற்ற அம்னோ, ம.சீ.ச, ம.இ.கா. , கெராக்கான், மைபிபிபி கட்சிகள் அந்த பணத்தை மீண்டும் தேசிய கருவூலத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டு கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன