வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது – ரஜினிகாந்த் !
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது – ரஜினிகாந்த் !

சென்னை:

கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று சபரிமலை குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் யாரும் நுழையக் கூடாது என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபு ஆகும். இந்த மரபை மாற்றும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாதத்தையொட்டி கோயில் நடைத் திறப்புக்காக வந்த பெண்கள் மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டனர். இன்னும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து கொண்டு காசியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களுக்கு ஆதரவாகவே உள்ளது.ஆனால் அதை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. கோயில்களுக்கான ஐதீகங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது. மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பார்த்து செய்ய வேண்டும் என்றார் ரஜினிகாந்த்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன