வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மஇகா உதவித் தலைவர் தேர்தல்: டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ், டத்தோ முருகையா வெற்றி
அரசியல்முதன்மைச் செய்திகள்

மஇகா உதவித் தலைவர் தேர்தல்: டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ், டத்தோ முருகையா வெற்றி

கோலாலம்பூர், அக்.21-
மஇகாவின் 3 உதவித் தலைவருக்கான தேர்தலில் இம்முறை 10 பேர் போட்டியிட்டனர். நடப்பு உதவித் தலைவரான செனட்டர் டத்தோ டி.மோகன் 9,093 வாக்குகளைப் பெற்று உதவித் தலைவர் பதவியை தக்கவைத்ததோடு முதலிடத்தை பிடித்தார்.

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் முன்னாள் இளைஞர் பகுதி தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரன் 2ஆம் நிலையில் வெற்றி பெற்றார். அவருக்கு 6,803 வாக்குகள் கிடைத்தன. இந்நிலையில் டத்தோ டி.முருகையா 3ஆம் நிலையில் வெற்றி பெற்றார். அவருக்கு 5,984 வாக்குகள் கிடைத்தன.

உதவித் தலைவர் போட்டியில் களம் இறங்கிய உமா ராணி குழுமத்தின் உரிமையாளர் ஏ.கே.ராமலிங்கத்திற்கு 5,884 வாக்குகள் கிடைத்தன. ஜோகூர் மாநில முன்னாள் தொடர்பு குழு தலைவர் டத்தோ எம்.அசோஜனுக்கு 5,498 வாக்குகளும், ஜோகூரைச் சேர்ந்த தெங்காரோ சட்டமன்றத்தைச் சேர்ந்த ரவின்குமாருக்கு 3,285 வாக்குகளும், மலாக்கா ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் லெச்சுமணனுக்கு 2,925 வாக்குகளும், ஆர்.கே.ரமணி கிருஷ்ணனுக்கு 1,250 வாக்குகளும், அன்பழகன் பொன்னுசாமிக்கு 642 வாக்குளும், கே.டி.பாலாவிற்கு 611 வாக்குகளும் கிடைத்தன.

உதவித் தலைவர் தேர்தலில் தமக்கு மகத்தான ஆதரவு வழங்கிய கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக செனட்டர் டி.மோகன் குறிப்பிட்டார். இந்த வெற்றியானது சமுதாயத்திற்கான சேவையை இன்னும் அதிகப்படுத்தும் என்றார்.

நமது உரிமைகளை கேட்டறிவதற்கு வலுவான கட்சியாக மஇகா இருக்க வேண்டும். இப்போது கட்சியின் உறுப்பினர்கள் மஇகாவின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் மூலம் சமுதாயத்தின் உருமாற்றத்திற்கு வித்திடமுடியும் என டத்தோ டி. மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடு தழுவிய நிலையில் உள்ள மஇகா உறுப்பினர்களை சந்தித்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என டத்தோ சிவராஜ் சுந்தரம் குறிப்பிட்டார். வட்டமேஜை கலந்துரையாடலை ஏற்பாடு செய்து மஇகாவின் உருமாற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என அவர் தெரிவித்தார். தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன