சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சிலாங்கூர் மாநில செயற்குழுத் தேர்தல் முதலிடம் பிடித்தார் எம்.பி.ராஜா
அரசியல்முதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் மாநில செயற்குழுத் தேர்தல் முதலிடம் பிடித்தார் எம்.பி.ராஜா

கோலாலம்பூர், அக்.21
சிலாங்கூர் மாநில செயற்குழுவிற்கான தேர்தலில் செலாயாங் தொகுதி மஇகா தலைவர் எம்.பி.ராஜா முதலிடம் பிடித்த வேளையில் உலுலங்காட் தொகுதி தலைவர் டாக்டர் செல்வா, பாலா, ஜீவா, எஸ்.முத்து, டத்தோ எஸ்.எம்.முத்து, டி.எம்.செல்வம், டத்தோ இப்ராஹிம் ஷா, டத்தோ முனியாண்டி, எம்.கோபால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பேரா மாநிலத்தை பொருத்தவரை டத்தோ இளங்கோ முதல் நிலையில் வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து எம்.சந்தன சாமி, தங்கராஜ், ஏ.சுப்ரமணியம், எஸ்.மோகன், ஜி.சண்முகவேலு, டத்தோ ஆர்.சுப்ரமணியம், எஸ்.புலிகேசி, எஸ்.ஜெயகோபி, பி.விஜயன் ஆகியோர் செயற்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

கூட்டரசுப் பிரதேசத்தில் விஜய் மோகன் முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி,ஆர்.டி.சுந்தரம், சேகர் மூர்த்தி, பாலகுமாரன், டத்தோ சிவகுமார், எஸ்.ராஜா, டத்தோ பெரு கருப்பன், டத்தோ வி.ராஜு, மோகன் பிள்ளை ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.

கெடா மாநிலத்தை பொறுத்தவரை செனட்டர் டத்தோ எஸ்.ஆனந்தன், எஸ்.கே.சுரேஷ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து சூரிய காந்தா, மாணிக்கம், டி.எச்.சுப்ரா, ராமசாமி, ஜீவரத்தினம், ஆர்.சுப்ரமணியம், எஸ்.விஸ்வலிங்கம், டத்தோ டாக்டர் ஜோஹிண்டர் ஆகியோர் கெடா மாநில செயற்குழுவில் இடம் பெற்றனர்.

பினாங்கு மாநிலத்தில் ஆர்.வடிவேலு, சுப்ரமணியம், ரவீந்திரன், டத்தோ ரவி நல்லையா, டத்தோ கே.முனியாண்டி, ஏ.சுப்ரமணியம், இ.பெருமாள், வி.ஆறுமுகம், ஆர்.மகேந்திரன், இஸ்மாயில் ஆகியோர் செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஜோகூர் மாநில செயற்குழுவில் முதலிடத்தை கஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ரவீந்திரன் பிடித்தார். அவரைத் தொடர்ந்து எஸ்.தேவா, சிவா, ஆர்.குமரன், எஸ்.சுப்பையா, சந்திரசேகர், ரகு, பசுபதி, சபாபதி, சுஜேந்திரன் ஆகியோர் ஜோகூர் செயல்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நெகிரி செம்பிலான் மஇகா செயற்குழுவில் எஸ்.கே.சேகர், டத்தோ எம்.வேலு, சுப்ரமணியம் ராமையா, பி.சொம்மையப்பன், ஆர்.கிருஷ்ணன், டத்தோ எம்.காளிதாஸ், கே.தனபாலன், பி.சுப்ரமணியம், பி.லெட்சுமணன், ஜி.ராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பினாங்கு மாநிலத்தை பொருத்தவரை பி.சுப்ரமணியம், எல்லப்பன், டத்தோ ஞான சேகரன், பி.ஆறுமுகம், ஜி.எஸ்.இளங்கோ, எஸ்.ராமலிங்கம், டத்தோ முருகையா, எம்.பாலசுப்ரமணியம், எம்.சுரேஷ், கே.குணசீலன் ஆகியோர் செயற்குழுவில் இடம் பிடித்துள்ளார்கள்.

இறுதியாக கிளாந்தான் மாநில செயற்குழுவில் முனியாண்டி பெருமாள், தர்மராஜா, கண்ணன், சிவபிரகாசம், ரேணுகோபால், சுப்ரமணியம், கிருஷ்ணன், வீரன், ஜெயபிரகாசம், மனோகரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன