மத்திய செயலவையில் முதலிடம் பிடித்தார் ஜெ.தினகரன்

0
7

கோலாலம்பூர், அக்.21
மஇகாவின் 21 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஜெ.தினகரன் 11,105 வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றதோடு முதலிடத்தைப் பிடித்தார். கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் மத்திய செயலவைக்கான இரண்டாவது இடத்தை கெலாங் பாத்தா டத்தோ கண்ணன் வென்றார்.

இதனிடையே, 3ஆவது மத்திய செயலவைக்கான இடத்தை குணசீலன் ராஜூ பிடித்தார். அவருக்கு 10,224 வாக்குகள் கிடைத்தன. குளுவாங் ஜி.ராமனும், மத்திய செயலவையில் இடம் பெற்றார். டத்தோ எம்.பி.நாதன், தைப்பிங் எம்.வீரன், சிப்பாங் வி.குணாளன், பாகான் டத்தோ டத்தோ ஆர்.சுப்ரமணியம், கே.முரளிநாத் ஆகியோருடன் கடந்த மத்திய செயலவையில் முதலிடம் பிடித்த முன்னாள் கல்வி துறை துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதனும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்தனர்.

தொடர்ந்து டத்தோ ஆர்.எஸ்.மணியம், டி.தர்மகுமாரன். ஆர்.டி.ராஜா, சுபாங் சௌதராஜன், கே.ராஜன், சதாசிவம் காளிமுத்து, மலாக்கா வி.பி.சண்முகம், மதுரைவீரன் மாரிமுத்து, ஆர்.ராஜேந்திரன், தஞ்சோங் மாலிம் கே.ரவீன், டத்தோ சுப்ரமணியம் கருப்பையா ஆகியோர் மத்திய செயலவையில் இடம் பெற்றுள்ளனர்.

1.ஜெ.தினகரன் -11,105
2.டத்தோ கண்ணன் -10,708
3.குணசீலன் ராஜூ -10,224
4.ஜி.ராமன் -10,060
5.டத்தோ எம்.பி.நாதன் -9,716
6.தைப்பிங் எம்.வீரன்- 9,701
7.சிப்பாங் வி.குணாளன் -9,440
8.டத்தோ ஆர்.சுப்ரமணியம் -9,327
9.கே.முரளிநாத் -9,325
10. கமலநாதன் -9,304
11. டத்தோ ஆர்.எஸ்.மணியம் -9,223
12. டி.தர்மகுமாரன் -8,950
13. ஆர்.டி.ராஜா -8,791
14.சௌதராஜன் -8,608
15.கே.ராஜன் -8,510
16. சதாசிவம் காளிமுத்து -8,365
17.வி.பி.சண்முகம் -8,257
18.மதுரைவீரன் மாரிமுத்து -7,872
19.ஆர்.ராஜேந்திரன் -7,808
20. கே.ரவி -7,647
21.டத்தோ சுப்ரமணியம் கருப்பையா -7,455
22. பி.பன்னீர் செல்வம் -7,320
23.கே.ஆர்.பார்த்திபன் -7,254
24.கே. தங்கராஜ் -6,307
25. கிருஷ்ணன் -6,217
26. டி.எச்.சுப்ரா -6,105
27. சிவகுமாரன் -6,058
28. தியாகராஜன் -4,492
29. சரவணன் -3,938
30. நெடுஞ்செழியன் -3,724
31. சி.எம்.ரமேஷ் -3,561
32. வெற்றி வேலன் -3,388
33. சோலை பாஸ்கரன் -2,945
34. சிவலிங்கம் -2,820
35. டாக்டர் பி.வேலாயுதம் -2,686
36. பி.விஜயன் -2,510
37. ஜி.ஏ.தெப்லா -2,463
38. ராமச்சந்திரன் -2,442
39. ரஹிம் -2,409
40. மகேந்திரன் -2,291