வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இங்கிலீஷ் பிரீமியர் லீக் : அர்செனலின் அதிரடி தொடர்கிறது !
விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியர் லீக் : அர்செனலின் அதிரடி தொடர்கிறது !

லண்டன், அக்.23- 

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் , திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் 3 – 1 என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. புதிய நிர்வாகியாக உனய் எமெரி பொறுப்பேற்றது முதல் அர்செனல் கடந்த 10 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.

முதல் பாதியில் ஹெக்டர் பெலரின் போட்ட சொந்த கோலால் அர்செனல் 0 – 1 என்ற கோலில் பின் தங்கியது. எனினும் முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் மெசூட் ஓசில் போட்ட கோலின் வழி அர்செனல் ஆட்டத்தை சமப்படுத்தியது. லெய்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் அர்செனல் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்த ஓசில் சிறப்பாக செயல்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இரண்டாம் பாதியில் பியேரி எமெரி அவ்பாமேயாங், அர்செனல் அணிக்கு இரண்டு கோல்களைப் புகுத்தினார். அவ்பாமேயாங்கின் அந்த இரண்டு கோல்களுக்கும், மெசூட் ஓசில் முக்கிய காரணமாக இருந்தார்.  இந்த வெற்றி அர்செனல் ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சியை வழங்கியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அர்செனல் , தற்போது தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இந்த 10 ஆட்டங்களில் 30 கோல்களைப் போட்டுள்ள அர்செனல் தற்போது லீக் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் இரண்டு புள்ளிகளில் மட்டுமே பின் தங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன