சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மலேசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு 72 ஆயிரம் டிக்கெட்டுகள் !
விளையாட்டு

மலேசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு 72 ஆயிரம் டிக்கெட்டுகள் !

கோலாலம்பூர், அக்.23-

2018 மலேசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் வரும் சனிக்கிழமை ஷா ஆலாம் அரங்கில் நடைபெறவிருக்கிறது. திரெங்கானுவும் பேராவும் மோதவிருக்கும் இந்த இறுதி ஆட்டத்தை முன்னிட்டு மலேசிய கால்பந்து லீக் நிறுவனம் 72 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய விருக்கிறது.

இதில், 50 ரிங்கிட் மதிப்புடைய 70 ஆயிரம் டிக்கெட்டுகள், பெரியர்வர்களுக்கும் 5 ரிங்கிட் மதிப்புடைய 2 ஆயிரம் டிக்கெட்டுகள், சிறுவர்களுக்கும் விற்பனை செய்யப்பட விருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் பெரியவர்களுக்கான டிக்கெட்டுகள்  தலா 30 ஆயிரமும் சிறுவர்களுக்கான டிக்கெட்டுகள் தலா 750- ம் வழங்கப்படும் என்று மலேசிய கால்பந்து லீக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஹமட் ஷஸ்லி ஷேக் முஹமட் தெரிவித்துள்ளார்.

இம்முறை அல் இக்சான் கடைகளிலும் டிக்கெட்டுகளை விற்க மலேசிய கால்பந்து லீக் நிறுவனம் ஆலோசித்திருப்பதாக முஹமட் ஷஸ்லி கூறினார். இதன் வழி பேரா அரங்கிலும், திரெங்கானுவில் இருக்கும் சுல்தான் நஸ்ரூடின் ஷா அரங்கில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்படாமல் கிள்ளான் பள்ளத்தாக்கில் இருக்கும் ரசிகர்களுக்கும் இலகுவாக டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடியும் என அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன