வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > யுவன்டசுக்கு எதிராக சிறுவர்களைப் போல் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் !
விளையாட்டு

யுவன்டசுக்கு எதிராக சிறுவர்களைப் போல் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் !

மென்செஸ்டர், அக்.24-

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் எச் பிரிவுக்கான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 0 – 1 என்ற கோலில் இத்தாலியின் யுவன்டசிடம் தோல்விக் கண்டது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களின் ஆட்டத் தரத்தை அதன் முன்னாள் ஆட்டக்காரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் சிறுவர்களைப் போல் விளையாடியதாகவும் யுவன்டஸ் ஆட்டக்காரர்கள் பெரியவர்களைப் போல் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தி இருப்பதாக ரியோ பெர்டினான்ட் தெரிவித்தார். மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் யுவன்டஸ் பல மடங்கு சிறப்பாக விளையாடி இருக்கிறது.

குறிப்பாக அனைத்துப் பகுதிகளிலும் அந்த அணி வலுவாகவே காணப்படுகிறது. மென்செஸ்டர் யுனைடெட், யுவன்டஸ் அணிகளுக்கு இடையில் மிகப் பெரிய இடைவெளி இருப்பதை அனைத்து தரப்பினரும் ஒப்பு கொள்ள வேண்டும் என அவர் சொன்னார். யுவன்டஸ் அணியில் ரொனால்டோ இணைந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன.

ஆனால் நீண்ட காலம் ஒரே அணியில் செயல்பட்டு வருவதைப் போல் ரொனால்டோவும் யுவன்டஸ் ஆட்டக்காரர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதை அவர் சுட்டி காட்டினார். கடந்த சில ஆண்டுகளாகவே மென்செஸ்டர் யுனைடெட்டின் ஆட்டத்தரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதற்கு இந்த ஆட்டமும் ஓர் எடுத்துக்காட்டு என அவர் சொன்னார்.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் யுவன்டசின் ஒரே வெற்றி கோலை முதல் பாதியில் பவ்லோ டியாபாலா போட்டார். இந்த வெற்றியின் மூலம் எச் பிரிவில் யுவன்டஸ் 9 புள்ளிகளுடன் தனது நிலையை வலுப்படுத்தி கொண்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன