வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இரண்டு சில்வாக்களின் கூட்டணியில் வெற்றி பதித்த மென்செஸ்டர் சிட்டி !
விளையாட்டு

இரண்டு சில்வாக்களின் கூட்டணியில் வெற்றி பதித்த மென்செஸ்டர் சிட்டி !

கார்கிவ், அக்.24 –

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் எப் பிரிவுக்கான ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3 – 0 என்ற கோல்களில் உக்ரேனின் ஷக்தார் டொனெட்ஸ்க்கை அதன் சொந்த அரங்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டாவிட்  சில்வாவும், பெர்னாடோ சில்வாவும் கோல்களைப் போட்டு மென்செஸ்டர் சிட்டிக்கு உதவியுள்ளனர்.

எப் பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் லியோனிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட மென்செஸ்டர் சிட்டி கடந்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனின் ஹொப்பன்ஹம் அணியுடன் 3 – 3 என்ற கோல்களில் சமநிலைக் கண்ட லியோன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

எதிரணியின் இடத்தில் மென்செஸ்டர் சிட்டி பெற்றிருக்கும் வெற்றி தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவ்வணியின் நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் தமது ஆட்டக்காரர்கள் அதிகமான வாய்ப்புகளை உருவாக்கியதாக அவர் கூறினார்.

30 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டியின் முதல் கோலை டாவிட் சில்வா போட்ட வேளையில் இரண்டாவது கோலை ஆய்மெரிக் லப்போர்த்தே போட்டார். இரண்டாம் பாதியில் சிட்டியின் மூன்றாவது கோலை பெர்னார்டோ சில்வா அடித்தார்.இன்னும் இரண்டு வாரங்களில் எத்திஹாட் அரங்கில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, ஷக்தார் டொனேட்ஸ்க்கை வீழ்த்தினால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிப் பெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன