வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > எல் கிலாசிக்கோ ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் பயிற்றுனராக இருப்பேன் – லொப்பேதேகு நம்பிக்கை !
விளையாட்டு

எல் கிலாசிக்கோ ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் பயிற்றுனராக இருப்பேன் – லொப்பேதேகு நம்பிக்கை !

மாட்ரிட், அக்.24-

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் எல் கிலாசிக்கோ ஆட்டத்தின்போது தாம் நிச்சயம் ரியல் மாட்ரிட் பயிற்றுனராக இருக்ககூடும் என ஜூலேன் லொப்பேதேகு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அண்மைய காலமாக ரியல் மாட்ரிட்டின் ஆட்டத் தரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து லொப்பேதேகு பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்கிழமை நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2 – 1 என்ற கோல்களில் விக்டோரியா பில்சேன் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டின் இரண்டு கோல்களை கரீம் பென்சீமாவும் மார்சேலோவும் போட்டனர்.  இந்த வெற்றி ரியல் மாட்ரிட்டின் எழுச்சிக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக லொப்பேதேகு தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட், ஜி பிரிவில் இத்தாலியின் ஏ.எஸ் ரோமாவுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றுள்ளது. பார்சிலோனாவுக்கு எதிரான எல் கிலாசிக்கோ ஆட்டத்தில் லொப்பேதேகு ரியல் மாட்ரிட்டின் பயிற்றுனராக செயல்படுவார் என அந்த கிளப்பின் இயக்குனர் எமிலியோ புட்ராகுனாவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன