வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > வட சென்னை உண்மையான கேங்ஸ்டர் படம் – அனுராக் காஷ்யப் புகழாரம் !
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வட சென்னை உண்மையான கேங்ஸ்டர் படம் – அனுராக் காஷ்யப் புகழாரம் !

சென்னை:

தான் பார்த்த உண்மையான கேங்ஸ்டர் படம் ‘வடசென்னை’ என பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘வடசென்னை’. விமர்சன ரீதியாக மாற்றுக் கருத்துகள் வந்தாலும், ஒரு திரைப்படமாக இது வெற்றி பெற்றிருக்கிறது.

இப்படத்தை பார்த்த பலர் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். இவர் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். வடசென்னை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அனுராக் காஷ்யப் கூறியிருப்பதாவது,

“நான் பார்த்த உண்மையான கேங்ஸ்டர் படம் வடசென்னை. வெற்றிமாறன் இதனை மிக எளிமையாக சாதித்து இருக்கிறார். தொடர்ச்சியாக அருமையாக படங்களை எடுப்பவர் நீங்கள். மிக சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் நீங்கள். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, தனுஷ் மற்றும் செந்தில், ராஜன், பத்மா கதாபாத்திரங்களில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கண்ணன் கதாபாத்திரத்தில் (ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திரம்) நடித்த அந்த பையன், அன்புக்கு ஆதரவாக தனது தந்தையை எதிர்த்து நிற்கும் அந்த காட்சி… நிறைய இருக்கிறது பேசுவதற்கு”.

இவ்வாறு அவர் பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவின் மிக முக்கிய கேங்க்ஸ்டர் படமாக கருதப்படுவது அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசிப்பூர். அப்படிப்பட்ட படத்தை எடுத்த அனுராக் காஷ்யப்பே வடசென்னை படத்தை பாராட்டியிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன