வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > 189 பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் கடலில் வீழ்ந்தது!
உலகம்முதன்மைச் செய்திகள்

189 பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் கடலில் வீழ்ந்தது!

ஜகார்த்தா, அக். 29 –

189 பயணிகளுடன் பங்கா பெலிதுங் ஈய வயல் மிக்க நகருக்குப் பயணித்த லையன் ஏஜேடி610 விமானம் திங்கட்கிழமை காலையில் ஜாவாவுக்கு அருகில் கடலில் வீழ்ந்தது.

அந்த விமானம் புறப்பட்டு 13 நிமிடத்துக்குப் பின்னர் அதனுடனான தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த விமானத்திலிருந்து எந்தவொரு ஆபத்து அவசர அழைப்பும் கிடைக்கவில்லை என்றும் ஜாவா கடலுக்கு அருகில். 35 மீட்டருக்கு இடையில் கைத்தொலைபேசிகள், உயிர்காப்பு ஜேக்கட்டுகள் மற்றும் விமான இருக்கைகளும் கடலில் மிதந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

லையன் ஏர் குழுமத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புதியது என்றும் கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்துதான் அது பயன்பாட்டுக்கு வந்ததாகவும் அந்த விமானத்தில் விமானியும் துணை விமானியும் 10,000 மணி பயண நேரத்தைக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

விமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை என்றும் அதன் கருப்புப்பெட்டி கிடைத்தால்தான் அதன் உண்மை தெரியவரும் என இந்தோனேசிய போக்குவரத்துப் பாதுகாப்புச் செயற்குழுவின் தலைவர் சோஜார்ந்தோ ட்ஜாஜோனோ தெரிவித்தார்.

அந்த விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக இருக்குமென்றும் 2015இல் ஏர் ஆசியாவுக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஜாவா கடலில் விழுந்து நொருங்கியது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தை அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு மன்றம், போயிங் மற்றும் யூஎஸ் விமானத் தயாரிப்பில் எஞ்சின்களைத் தயாரித்துக் கொடுக்கும் சிஎஃஎம் இண்டர்நேஷனல் நிறுவனமும் புலனாய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது.

அந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 6.20க்குப் புறப்பட்டு பங்கா நகரை 7.20க்குச் சென்றடையும் என எதிர் பார்க்கபட்டது.

அது 2,000 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ஏதோ அசம்பாவிதம் நடப்பது போன்ற சமிக்ஞை உணரப்பட்டதாகவும் அதன் பின்னர் அது 500 மீட்டருக்குக் கீழிறங்கி இடது புறமாகத் திரும்பி, பின்னர் 1,524 மீட்டருக்கு மேலே சென்று தொடர்ந்து பயணித்ததாகவும் அதன் பின்னர், அது மணிக்கு 397 மைல் வேகத்தில் சென்றதாகவும் தரைக்கு 3,650 அடிக்கு மேல் அது பயணித்துக் கொண்டிருந்த போது, அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அப்போது அது இந்தோனேசிய கடற்கரைக்கு அப்பால் 15 கி.மீட்டர் தூரத்தில் இருந்ததாகப் விமானப் பதிவுகள் காட்டுகின்றன.

1997இல் நேர்ந்த கருடா இந்தோனேசியா ஏ300 விமானத்தில் கொல்லப்பட்ட 214 பயணிகளின் விபத்துக்குப் பின்னர் இது இரண்டாவது பெரிய விபத்தாகக் கொள்ளப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன