வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பயிற்றுனரை நீக்கியது ரியல் மாட்ரிட் !
விளையாட்டு

பயிற்றுனரை நீக்கியது ரியல் மாட்ரிட் !

மாட்ரிட், அக்.30-

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ரியல் மாட்ரிட் , ஜூலேன் லொப்பேதேகுவேய்யை பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.  ரியல் மாட்ரிட் பயிற்றுனராக பொறுப்பேற்ற 139 நாட்களுக்குப் பின்னர், லொப்பேதேகுவே அந்த கிளப்பை விட்டு வெளியேறுகிறார.

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் கால்பந்து அணியை வழிநடத்த தயாராக இருந்த லொப்பேதேகுவே, அதன் பின்னர் ரியல் மாட்ரிட் கிளப்பில் இணையப் போவதாக அறிவித்திருந்தார். உலகக் கிண்ணப் போட்டிக்கு தொடங்க ஐந்து நாட்கள் இருக்கும்போது ரியல் மாட்ரிட் வெளியிட்ட இந்த அறிவிப்பு ஸ்பெயின் கால்பந்து சங்கத்தை அதிருப்தி அடைய வைத்தது. இதனால் ஸ்பெயின் அணியின் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து லொப்பேதேகுவே நீக்கப்பட்டார்.

இதனையடுத்து ரியல் மாட்ரிட் பயிற்றுனராக பொறுப்பேற்ற லொப்பேதேகுவே தமது கால்பந்து வாழ்க்கையில் மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார். கடந்த ஏழு ஆட்டங்களில் ரியல் மாட்ரிட், ஐந்தில் தோல்வி கண்டது. ஆக கடைசியாக எல் கிலாசிக்கோ ஆட்டத்தில் தனது பரம வைரியான பார்சிலோனாவிடம் 1- 5 என படுதோல்வி அடைந்துள்ளது.

லொப்பேதெகுவே பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்த ரியல் மாட்ரிட் பி அணியின் பயிற்றுனர் சந்தியாகோ சொலாரி இடைக்கால பயிற்றுனராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் செல்சியின் முன்னாள் நிர்வாகி அந்தோனியோ கொந்தேவைக் கொண்டு வரவும் ரியல் மாட்ரிட் முயன்று வருகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன