வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இங்கிலீஷ் பிரீமியர் லீக் – மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது மென்செஸ்டர் சிட்டி !
விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியர் லீக் – மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது மென்செஸ்டர் சிட்டி !

லண்டன், அக்.30-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது. திங்கட்கிழமை ( மலேசிய நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை ) நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1 – 0 என்ற கோலில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் ஒரே கோலை ரியாட் மாஹ்ரேஸ் போட்டார். ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தற்காப்பு ஆட்டக்காரர் கியேரேன் திரிப்பேயர் செய்த தவறை நன்கு பயன்படுத்தி கொண்ட மாஹ்ரேஸ், மென்செஸ்டர் சிட்டியின் வெற்றி கோலை அடித்தார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெய்செஸ்டர் சிட்டியின் உரிமையாளர் விச்சாய் சிரிவதானபிரபாவுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் கோல் அடித்தப் பிற்கு ஆகாயத்தை நோக்கி மாஹ்ரேஸ் கையை உயர்த்தி காட்டினார். லெய்செஸ்டர் சிட்டி கிளப்பில் நான்கு ஆண்டுகள் மாஹ்ரேஸ் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த ஏழு லீக் ஆட்டங்களில், மென்செஸ்டர் சிட்டி ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதேவேளையில் இந்த பருவத்துக்கான பிரீமியர் லீக் போட்டியில் தோல்வியே காணாத கிளப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. மென்செஸ்டர் சிட்டியைத் தவிர்த்து, லிவர்புல், செல்சியும் எந்த ஓர் ஆட்டத்திலும் தோல்வி காணவில்லை என்பது குறிப்பிடதக்கது.லிவர்புல் அணியுடன் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், கோல் வேறுபாட்டில் மென்செஸ்டர் சிட்டி முதலிடத்தில் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன