அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புதிய வீடுகளின் விலை 10% குறைந்துள்ளது
அரசியல்முதன்மைச் செய்திகள்

புதிய வீடுகளின் விலை 10% குறைந்துள்ளது

கோலாலம்பூர், அக்.30
எஸ்எஸ்டி எனப்படும் விற்பனைச் சேவை வரி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நிர்மாணிக்கப்படாத புதிய வீடுகளின் விலை 10 விழுக்காடு குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

கட்டுமானச் சேவைகளுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படாததால் வீடுகளுக்கான விலை 5 விழுகாட்டிலிருந்து 10 விழுக்காடு வரை குறையும்.

இதற்கு முன் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியின் கீழ் கட்டுமானச் சேவைக்கு 6 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது.

ஆனால் இம்முறை இதற்கு வரி விதிக்கப்படாததற்குக் காரணம் வீடுகளின் விலையைக் குறைக்க சொத்துடைமைத் துறைக்கு ஊக்குவிப்பு வழங்குவதற்கே ஆகும் என்று கட்டுமானப் பொருள்கள், கட்டுமானச் சேவைகளுக்கு எஸ்எஸ்டி வரி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து கட்டுமானச் செலவில் சிறு சிக்கனம் ஏற்படக்கூடும் என்று ரேடா எனப்படும் மலேசிய வீடமைப்பு மற்றும் சொத்துடைமை மேம்பாட்டாளர்கள் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டது.

இது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் லிம் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

இதனிடையே, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2019ஆம் ஆண்டிற்க்கான வரவுச் செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன