வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > இந்தோனேசியாவில் விமானம் விபத்து; 24 சடலங்கள் மீட்பு
உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் விமானம் விபத்து; 24 சடலங்கள் மீட்பு

ஜகார்த்தா, அக் 30
இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம் நேற்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானத்தின் உடைந்த பாகங்கள் பயணிகளுக்குச் சொந்தமான சில பொருட்களும் கடலில் மீட்கப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜவாவிற்கு அருகே தஞ்சோங் கரவாங் கடல் பகுதியில் விழுந்த அந்த விமானத்தை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று காலை 24 உடல்கள் மீட்கப்பட்டதோடு விமானத்தின் உடைந்த பாகங்கள் சிலவற்றுடன் பயணிகளுக்கு சொந்தமான சில பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

181 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் சென்ற லயன் ஏர் விமானம் ஜெடி 610 விமானம் நேற்று காலை 6.20 மணியளவில் ஜகார்த்தாவில் சுகார்னோ ஹாட்டா விமான நிலையத்திலிருந்து பங்கால் பினாங்கிலுள்ள டே பார்த்தி அமிர் விமான நிலையத்திற்கு புறப்பட்ட 15 நிமிடங்களில் அவ்விமானம் கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதுவரை இந்த விமான விபத்திற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. எனினும், விமான இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாக கடலில் விழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன