செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வெ.260 கோடி எங்கிருந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே -துன் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

வெ.260 கோடி எங்கிருந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே -துன் மகாதீர்

கோலாலம்பூர், அக்.30-
சவூதி அரேபியா நன்கொடையாக 260 கோடி வெள்ளி கொடுத்தது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் இதுபற்றி உலகத்திற்கே தெரியும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அந்த 260 கோடி வெள்ளி சவூதி அரேபியா அரசு நன்கொடையாகக் கொடுத்தது என நஜீப் தொடர்ந்து கூறி வருவது பற்றி கேட்ட போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இதை தவிர அவரால் வேறு எதையும் சொல்ல முடியாது. உலகத்திற்கே இதுபற்றி தெரிவதால் மலேசியா மீது குறை கூறல்கள் எழுந்தன என்று தலைநகரில் நடைபெற்ற லஞ்ச ஊழல் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடன் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன