அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கார்டீனியா ரொட்டிகளின் விலை ஏற்றம்
முதன்மைச் செய்திகள்

கார்டீனியா ரொட்டிகளின் விலை ஏற்றம்

பெட்டாலிங் ஜெயா, அக் 31
பொருள், தயாரிப்புகளுக்கான செலவு உயர்ந்து விட்டதால் தனது நிறுவனத்தின் ஒரு சில ரொட்டிகளின் விலையும் நாளை தொடங்கி அதிகரிக்கும் என கார்டீனியா பேக்கரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த தயாரிப்புகளில் Auntie Rosies Original Homestyle, Auntie Rosies Natural Pandan 3 வெள்ளியாகவும் Delicia Milky Chocolate 7 வெள்ளி 20 காசாகவும், Hazelnut Chocolate 9 வெள்ளி 10 காசாகவும் விலை உயர்த்தப்படும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

இதே போல் Delicia Butterscotch, Choco Raisin, Raspberry Milk and Cranberries, Butter Raisin ஆகியவை 4 வெள்ளி 50 காசாக அதிகரிக்கும் நிலையில் வென்னிலா, சோளம், பட்டர்ஸ்காட்ச், சாக்லெட் சுவை கொண்ட ரொட்டிகளின் விலை 0.85 காசாக அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும், fibremeal, cottage Eropah, Squiggles, Twiggies, Muffin Supremes ஆகியவற்றின் விலை தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன