அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ம.இ.கா. நிர்வாகச் செயலாளராக டத்தோ அசோஜன் நியமனம்!
அரசியல்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ம.இ.கா. நிர்வாகச் செயலாளராக டத்தோ அசோஜன் நியமனம்!

கோலாலம்பூர். நவ. 1-

ம.இ.கா. நிர்வாகச் செயலாளராக கம்பீர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அசோஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் நிர்வாகச் செயலாளராக டத்தோ அசோஜன் இனி செயல்படுவார் என அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

முன்னதாக அண்மையில் கடந்த கட்சியின் உயர்மட்டத் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ அஜோசன் போட்டியிட்டார். இத்தேர்தலில் அவருக்கு 5,498 வாக்குகள் கிடைத்தன. ஆனால் அவர் 5ஆவது இடத்தையே பிடித்தார். கம்பீர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ அஜோசன், கட்சியில் பல ஆண்டுகாலமாக சேவையாற்றியவர்.

இப்போது அவர் கட்சியின் நிர்வாகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 4ஆம் இடம் பிடித்த உமாராணி குழுமத்தின் உரிமையாளர் ராமலிங்கத்திற்கு கட்சியின் முக்கியமான பதவி வழங்கப்படுமென பேசப்படுகின்றது. குறிப்பாக தகவல் பிரிவுத் தலைவர் அல்லது கூட்டரசுப் பிரதேச தலைவர் பதவி வழங்கப்படலாம் என பேசப்படுக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன