வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > தலைநகரில் ஒப்ஸ் பெர்டானா சோதனை நடவடிக்கை; 108 பேர் கைது
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தலைநகரில் ஒப்ஸ் பெர்டானா சோதனை நடவடிக்கை; 108 பேர் கைது

கோலாலம்பூர், நவ.1
தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட 9ஆவது ஒப்ஸ் பெர்டானா சோதனை நடவடிக்கையில் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு இயக்கத்தின் (ஏஏடிகே) தலைமை இயக்குநர், டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி அப்துல்லா தெரிவித்தார்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் உட்கொண்ட சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

பிரிக்பீல்ட்ஸ், செராஸ், டாங் வாங்கி, செந்தூல் ஆகிய இடங்களிலுள்ள பிபிஆர் வீடமைப்புப் பகுதிகளில் போதைப்பொருள் சோதனை மேற்கொள்வதிலிருந்து இவர்கள் தப்பிக்க முடியவில்லை.

அவர்களில் 77 பேர் பெத்தமின் உட்கொண்டிருந்த வேளையில், 20 பேர் THC மற்றும் 11 பேர் ஒபியேட் போதை பொருட்களை உட்கொண்டிருந்தனர்.

பிபிஆர் குடியிருப்புகள் உட்பட தலைநகரில் சில பொது வீடமைப்புப் பகுதிகளில் நடத்தப்பட்டதற்குக் காரணம் அவை பொது மக்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பில் மிகவும் ஆபத்தானப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டதே ஆகும் என்று ஸுல்கிப்ளி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன