அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கிரேப் சேவையைத் தடை செய்ய கோரிக்கை; அரசு செவி சாய்க்காது
அரசியல்முதன்மைச் செய்திகள்

கிரேப் சேவையைத் தடை செய்ய கோரிக்கை; அரசு செவி சாய்க்காது

கோலாலம்பூர், நவ.1
கிரேப் சேவையைத் தடை செய்ய வேண்டுமென்ற டாக்சி ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லொக் சியூ பூக் தெரிவித்தார்.

டாக்சி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து அரசு விழிப்புடன்தான் இருக்கிறது. இருப்பினும் அதில் டாக்சி ஓட்டுநர்களின் கருத்துகளை மட்டும் பார்க்காமல் பயணிகளின் கருத்துகளையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதில் கிரேப் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அவர்களுக்கான சமூகநலத் திட்டத்தை அமைச்சு தற்போது வரைந்து வருகிறது. டாக்சி ஓட்டுநர்களும் அதிநவீனத் தொழில்நுட்ப முறைக்கு மாற வேண்டும் என்பது அமைச்சின் நோக்கமோகும் என்று அவர் தெரிவித்தார்.

அதனால் டாக்சி ஓட்டுநர்கள் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையை அமைச்சு அவர்களுக்கு ஏற்படுத்தும் என்றும் இதில் டாக்சி ஓட்டுநர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த அமைச்சு விரும்பவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன