வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிகேஆர் தலைவர் கைது! எம்ஏசிசி நடவடிக்கை
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பிகேஆர் தலைவர் கைது! எம்ஏசிசி நடவடிக்கை

பெட்டாலிங் ஜெயா, நவ. 3-

பிகேஆர் கட்சித் தேர்தலில் போலி வாக்காளர் பட்டியலை வெளியிட்டதன் தொடர்பில் அதன் தொகுதித் தலைவர் ஒருவர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சரவாக்கின் ஜூலாவ் தொகுதியின் 603 உறுப்பினர்களின் எண்ணிக்கை ஜூன் 26இல் திடீரென 13.000ஆக அதிகரித்ததை அடுத்து, அதனை விசாரிக்கும்படி எம்ஏசிசி கேட்டுக் கொள்ளப்பட்டது.

அந்தத் தலைவர் நேற்று பிகேஆர் உச்சமன்ற கூட்டத்திற்காக கோலாலம்பூருக்கு வந்தபோது, இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அவர் விசாரணைக்காக ஒரு நாள் மட்டுமே தடுத்து வைக்க அனுமதியை எம்ஏசிசி பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சரவாக் பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் வெர்னோன் கெடிட் அது பற்றி விசாரிக்கும்படி அக்டோபர் 25இல் ஊழல் தடுப்பு ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார்.

அது பற்றிக் குறிப்பிட்ட சரவாக் பிகேஆர் செயலாளர் நிக்கோலஸ் பாவின், புகார் செய்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழி எதுவும் இல்லையெனக் குறிப்பிட்டார்.

பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் அதனைப் பரிசீலிக்கும் கால அவகாசம் காலவதியாகி விட்டதால், அதனை உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமாரிடம் அனுப்பினார்.
சரவாக்கில் கட்சியின் தேர்தல் நவம்பர் 10இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன