புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பக்காத்தான் அரசுக்கு நடுத்தர குடும்ப மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை – டத்தோஸ்ரீ நஜீப்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பக்காத்தான் அரசுக்கு நடுத்தர குடும்ப மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை – டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், நவ. 4
பி40 பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிடிபிடிஎன் கடனில் கழிவு வழங்கப்படும் என பக்காத்தான் அரசாங்கத்தின் முடிவை டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் கடுமையாகச் சாடியுள்ளார்.

பி40 பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே கழிவு தரப்படும் வேளையில் எம்40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அம்மாதிரியான நிலையில் இருக்கும் மாணவர்கள் நல்ல புள்ளிகளைப் பெறுகின்றனர். ஆனால், அவர்களுக்குக் கழிவு தரப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தேசிய முன்னணியின் ஆட்சியில் முதல் நிலை தேர்ச்சி பெற்றிருந்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கல்விக் கடனைச் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். அது கல்வியில் சிறந்து விளங்க அவர்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது என நஜீப் தமது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என பக்காத்தான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டது என்னவானது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன