வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது -டத்தோ சைபுடின் நசுதியோன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

தீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது -டத்தோ சைபுடின் நசுதியோன்

கூலிம், நவ.4

விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களாக 16 வகையான பொருள்கள் அறிவிக்கப்பட்டு தீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது என உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தொடர்பில் கூலிம் பொதுச் சந்தையில் மேற்கொண்ட கண்ணோட்டத்தின்படி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு சில பொருள்களின் விலை குறைந்திருப்பதோடு இன்னும் சில பொருள்களின் விலை நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது என்று அவர் சொன்னார்.

எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அந்தக் காலக் கட்டம் வரை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விலை கட்டுபாட்டுத் திட்டத்தைப் பின்பற்றத் தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன