வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தேசிய முன்னணி தோல்விக்கு 1எம்டிபிதான் காரணம் -டத்தோஸ்ரீ நஸ்ரி 
அரசியல்முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணி தோல்விக்கு 1எம்டிபிதான் காரணம் -டத்தோஸ்ரீ நஸ்ரி 

கோலாலம்பூர், நவ. 4
14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்ததற்கு 1எம்டிபி நிதி முறைகேடுதான் காரணம் என்று அம்னோவின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்துள்ளார்.

1எம்டிபி நிதி முறைகேட்டினால்தான் தேசிய முன்னணி தோல்வியடைந்ததாக கைரி ஜமாலுடின் அண்மையில் தமது டுவிட்டரில் குறிப்பிட்டதைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், அந்த விவகாரம் ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்ட பின்னரே அமைச்சரவைக்குத் தெரிய வந்ததாகவும், அப்பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் எனக் கூறப்பட்டதனாலேயே அமைச்சரவை நஜீப்பைத் தற்காத்து அமைதி காத்ததாக நஸ்ரி குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி தோற்றதற்கு மக்களின் வெறுப்பு காரணமல்ல என்றும் அது 1எம்டிபியினால்தான் எனவும் குறிப்பிட்டார். இதனை நாம் மறுக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால் அது இனிமேலும் அரசியல் விஷயமாகக் கருதக்கூடாது எனவும் நஸ்ரி கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன