வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மீண்டும் விசாரணை; எம்ஏசிசி அலுவலகத்தில் நஜீப்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மீண்டும் விசாரணை; எம்ஏசிசி அலுவலகத்தில் நஜீப்

கோலாலம்பூர், நவ 8
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வாக்குமூலம் அளிக்க இன்று மீண்டும் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணை அலுவலகத்திற்கு சென்றார்.

சரவாக்கில் உள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தி ஈர்ப்பு தகடுகள் பொருத்தும் விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை 9.30 மணியளவில் அந்த அலுவலகத்தின் பின் வாசல் வழியாக டத்தோஸ்ரீ நஜீப் பயணித்த கார் எம்ஏசிசி தலைமையகத்திற்கு சென்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன