வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மீதான குற்றச்சாட்டுகள்; 99 விழுக்காடு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது
அரசியல்முதன்மைச் செய்திகள்

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மீதான குற்றச்சாட்டுகள்; 99 விழுக்காடு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது

கோலாலம்பூர், நவ 8
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மான் மன்சோர் சம்பந்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகள் தொடர்பில் 99 விழுக்காடு ஆவணங்கள் தற்காப்பு வாத வழக்கறிஞர் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக கோலாலம்பூர் செக்ஷன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கள்ளப்பணத்தை செலவலித்தது, உள்நாட்டு வருமான வாரியத்திடம் வருமானத்தை அறிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் எதிர்நோக்கியுள்ளார்.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வேளையில் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்கும் கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் தெரிவித்தார்.

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் சார்பில் ஆஜராகும் டத்தோ கே.குமரேந்திரன் கூறுகையில், கடந்த மாதம் 30ஆம் தேதி 600 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தங்கள் தரப்பு பெற்றதாகவும் பொருளக கணக்கறிக்கை மட்டும் இன்னும் பெறப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

அந்த ஆவணங்களை மேலும் ஆராய வேண்டும் என்பதால் ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கு விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்கும்படி டத்தோ கே.குமரேந்திரன் நீதிபதியை கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன