உள்ளூர் திரைப்பட துறைக்கு ஆதரவு அளிப்பீர்! – கோபிந்த் சிங் டியோ

0
4

கோலாலம்பூர், நவ.8
உள்ளூர் திரைப்பட துறைக்கு அனைத்து துறைகளும் ஆதரவும் ஊக்குவிப்பும் வழங்க வேண்டும் என தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.

இத்துறையை மேம்படுத்த ஆக்கப்பூர்வ கருத்துகள் தேவை. எனினும், அனைத்து நிலைகளிலும் பல பிரச்னைகள் உள்ளதால் இவை முதலில் களையப்பட வேண்டும் என்று தமது டுவீட்டரில் அவர் குறிப்பிட்டார்.

சமீப காலமாக பெரும் வசூலைக் குவித்து வரும் உள்ளூர் திரைப்பட துறையை மேம்படுத்துவது குறித்து இஸ்க் அஜிஸ் என்பவர் முன் வைத்த பரிந்துரைக்கு பதில் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஃபினாஸ் எனப்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியத்தின் இணைய தளத்தின் வழி இவ்வாண்டு அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட திரைப்படங்கள் வரிசையில் முனாஃபிக் 2 (வெ.37,738,463.83), ஹந்து காக் லிமா (வெ.36,231,126.77) மற்றும் கேஎல் ஸ்பெஷல் ஃபோர்ஸ் (வெ.12,216,321) ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.