வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிகேஆர் துணைத் தலைவர் பதவியை அஸ்மின் தற்காத்துக் கொள்வாரா?
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பிகேஆர் துணைத் தலைவர் பதவியை அஸ்மின் தற்காத்துக் கொள்வாரா?

கோலாலம்பூர், நவ. 12-

பிகேஆரின் துணைத் தலைவர் பதவிக்குத் தம்மை எதிர்க்கும் ரபிஸி ரம்லியை விட நடப்பு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி 3,956 பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

ஆகக் கடைசியாக கட்சியின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் அலி மொத்தம் 70,550 வாக்குகளும் ரபிஸி ரம்பி 66,594 வாக்குகளும் பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.

மேற்கண்ட முடிவுகள் யாவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அதில் சபாவின் பென்சியாங்கான் தொகுதியின் 1,718 வாக்குகளும் ஜுலாவ் தொகுதியின் வாக்குகளும் சேர்க்கப்படவில்லை. சரவாக்கில் உள்ள 29 தொகுதிகளில் அஸ்மின் 23இல் வெற்றியும் 4,020 வாக்குகளையும் பெற்றிருக்கும் வேளையில், ரபிஸி 1,884 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

ஜுலாவில் இருந்த 603 உறுப்பினர் எண்ணிக்கையானது திடீரென 13,175ஆக உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதன் முடிவுகளின் அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அஸ்மின் 6 மாநிலங்களிலும் ரபிஸி 7 மாநிலங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். எனினும், வாக்கு எண்ணிக்கையில் அஸ்மினே முன்னணியில் இருக்கிறார்.

அஸ்மின் சிலாங்கூரில் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றதோடு, 19,555 வாக்குகளைப் பெற்று, ரபிஸியை விட 6607 வாக்குப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார். 22 தொகுதிகளில் 16 இல் வெற்றி பெற்றிருப்பதோடு தமது நாடாளுமன்ற தொகுதியான கோம்பாக்கில் 823 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அங்கு ரபிஸிக்கு 242 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. ரபிஸியின் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியான பாண்டானில் அஸ்மின் 774 வாக்குகளைப் பெற்றிருக்கும் வேளையில் ரபிஸிக்கு 559 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஆகக் கடைசி நிலவரப்படி ரபிஸி திரெங்கானு, கிளந்தான், கோலாலம்பூர், பெர்லிஸ், நெகிரி செம்பிலான், சபா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்பதாகவும் அஸ்மின் பினாங்கு, ஜோகூர், பகாங், சிலாங்கூர், கெடா மற்றும் சரவாக்கில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பிகேஆர் மகளிர் அணிக்குப் போட்டியிட்ட ஹனிஸா முகமட் தல்ஹா 2,607 வாக்குப் பெரும்பான்மையோடு 29,111 வாக்குகளும் அவரை எதிர்த்து புசியா சாலே 25,504 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன