முகப்பு > அரசியல் > HRDF நிதி முறைகேடு: முன்னாள் நிர்வாகத் தலைவர் கருத்து கூற மறுப்பு
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

HRDF நிதி முறைகேடு: முன்னாள் நிர்வாகத் தலைவர் கருத்து கூற மறுப்பு

பெட்டாலிங் ஜெயா, நவ. 12-

மனிதவள மேம்பாட்டு நிதியத்தில் நிதிமுறைகேடு சம்பந்தமாக அதன் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான சி.எம்.விக்னேஸ்வரன் ஜெயேந்திரன் கருத்துக் கூற மறுத்து விட்டார்.

தற்போதைக்கு அது பற்றி தாம் எதுவும் கூறப்போவதில்லை என்றும் மனிதவள அமைச்சரின் அறிக்கையைத் தாம் இன்னும் பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதவிலிருந்து விக்னேஸ்வரன் ஜூன் 21இல் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமையன்று மனிதவள அமைச்சர் குலசேகரன் நகரமன்ற கூட்டம் ஒன்றில், மனிதவள நிதியத்தின் சில அதிகாரிகள் அதன் வெ. 10 கோடி வரைக்குமான நிதியை முறைகேடாக கையாடல் செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது வரை இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அந்நிதியத்தின் முன்னாள் மற்றும் நடப்பு ஊழியர்கள் அது பற்றி விசாரிக்கப்படுவர். முதலாளிகள் வழங்கும் பங்களிப்பின் மூலம் தொழிலாளர்களுக்குத் திறன் பயிற்சிகளை வழங்க மனிதவள அமைச்சினால் இந்த நிதியம் தோற்றுவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன