வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அமைச்சரவையில் மாற்றமா?
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அமைச்சரவையில் மாற்றமா?

புத்ராஜெயா, நவ.12

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அமைச்சரவையை மாற்றி அமைக்கப் போவதாக தாம் எதுவும் கேள்விப்படவில்லை என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்

அமைச்சரவைக் கூட்டங்களிலோ பக்காத்தான் ஹராப்பான் கட்சிக் கூட்டங்களிலோ அது குறித்து எதுவும் கேள்விப்படவில்லை. அது வெறும் ஊகமாகக்கூட இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அப்படியே எதுவும் நடப்பதாக இருந்தால் அதைப் பிரதமர்தான் முடிவு செய்வார், என வர்த்தக வானொலி நிலையம் பிஎப்எம்-மின் காலை நேர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது லிம் கூறினார்.

இதில் ஹராப்பான் அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் லிம் தற்காத்துப் பேசினார்.

நான் அறிந்தவரை என் சகாக்கள் எல்லாருமே நன்றாகவே செயல்படுகிறார்கள், என்றார்.

நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்கவுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற நாளிலிருந்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்படப்போகிறது என்று கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன