அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மஇகாவின் பொது செயலாளராகிறார் டத்தோஸ்ரீ வேள்பாரி
அரசியல்முதன்மைச் செய்திகள்

மஇகாவின் பொது செயலாளராகிறார் டத்தோஸ்ரீ வேள்பாரி

கோலாலம்பூர், நவ 14-

மஇகாவின் பொது செயலாளராக டத்தோஸ்ரீ சா.வேள்பாரி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மாலை 3.00 மணியளவில் மஇகா தலைமையகத்தில் உச்சமன்ற பதவிகளுக்கான பொருப்பாளர்களின் நியமனம் நடைபெறவிருக்கின்றது. அது குறித்த பட்டியலை கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வெளியிடவிருக்கின்றார்.

முன்னதாக நிர்வாக இயக்குநராக டத்தோ அசோஜன் நியமிக்கப்பட்டுள்ள வேளையில், கட்சியின் பொது செயலாளராக டத்தோஸ்ரீ வேள்பாரி நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதோடு, உமாராணி குழும உரிமையாளர் ராமலிங்கமும் உயர்மட்ட பதவிகளில் அமருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன