திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > எவெர்டன் சோரேசை குறி வைக்கும் மென்செஸ்டர் யுனைடெட் !
விளையாட்டு

எவெர்டன் சோரேசை குறி வைக்கும் மென்செஸ்டர் யுனைடெட் !

மென்செஸ்டர், நவ.17-

பிரேசிலின் கிரேமியோ கிளப்பில் விளையாடி வரும் தாக்குதல் ஆட்டக்காரர் எவெர்டன் சோரேசை வாங்க, மென்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டுள்ளதாக  ஈ.எஸ்.பி.என் விளையாட்டு செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மென்செஸ்டர் சிட்டியுடனும் இணைத்து பேசப்படும் சோரேசை, தென் அமெரிக்காவில் முகாமிட்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட்டடுக்கு புதிய  ஆட்டக்காரர்களைத் தேடும் அதிகாரியும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

22 வயதுடைய எவெர்டன் சோரேஸ், இடது அல்லது மத்திய தாக்குதல் பகுதியில் விளையாடும் ஆற்றலைப் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், நடைபெற்ற அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் பிரேசில் அணியில் நெய்மாருக்குப் பதில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கினார்.

2022 ஆம் ஆண்டு வரை கிரேமியோ கிளப்புடன் ஒப்பந்தம் கொண்டுள்ள எவெர்டன் சோரேசை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் 3 கோடி பவுன்ட் ஸ்டேர்லிங்கை செலவிட வேண்டும் என கூறப்படுகிறது. இதனிடையே மென்செஸ்டர் யுனைடெட்டின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஆன்டர் ஹெரேராவை வாங்க, இத்தாலி, ஸ்பெயினைச் சேர்ந்த கிளப்புகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன.

29 வயதுடைய ஹெரேரா, மென்செஸ்டர் யுனைடெட்டுடனான ஒப்பந்ததை நீட்டிக்க பேச்சுகளை நடத்தி வருகிறார். இருப்பினும் பேச்சுகளில் இழுபறி நீடிப்பதால், இத்தாலி, ஸ்பெயினைச் சேர்ந்த கிளப்புகள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன