ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் முஹமட் ஹசான் போட்டியிட நெகிரி ம.இ.கா. இளைஞர் பிரிவு ஆதரவு!
முதன்மைச் செய்திகள்

ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் முஹமட் ஹசான் போட்டியிட நெகிரி ம.இ.கா. இளைஞர் பிரிவு ஆதரவு!

சிரம்பான், நவ.17-

நெகிரி செம்பிலான் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால், அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட, அம்மாநிலத்தின்   ம.இ.கா இளைஞர் பிரிவு முழு ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முஹமட் ஹசான் தமது தொகுதியைத் தற்காக்க, ம.இ.கா. இளைஞர் பிரிவு கடுமையாக உழைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நெகிரி செம்பிலானில் இந்திய சமுதாயத்துக்கு முஹமட் ஹசான் வழங்கிய பங்களிப்பை இந்தியர்கள் ஒருபோதும் மறந்து விடவில்லை. குறிப்பாக கோவில் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம், சமூக உதவிகள் என பல்வேறு வடிவங்களில் முஹமட் ஹசான் இந்திய சமுதாயத்துக்கு உதவிப் புரிந்துள்ளார்.

தேசிய முன்னணியின் தலைமையிலான முந்தைய மாநில அரசாங்கம், இந்தியர்கள் மட்டுமின்றி எந்த ஓர் இனத்தையும் புறக்கணித்தது கிடையாது. எனவே ரந்தாவில் பிறந்து வளர்ந்த முஹமட் ஹசான் நிச்சயம் அந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக ரமேஷ் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலின்போது ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி செல்லாது என தேர்தல் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது.,  பி.கே.ஆர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் எஸ். ஶ்ரீ ராம், வேட்புமனு தாக்கல்  மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படாதை அடுத்து முஹமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன