அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் – அம்னோ இளைஞர் பிரிவு நெருக்குதல் !
முதன்மைச் செய்திகள்

வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் – அம்னோ இளைஞர் பிரிவு நெருக்குதல் !

கோலாலம்பூர், நவ.18 –

நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில் செயல்படுவதால், பி.வேதமூர்த்தி பிரதமர்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வஜ்டி டசூக்கி தெரிவித்துள்ளார். ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் என்ற முறையில் வேதமூர்த்தி இதற்கு முன்னர் வெளிநாடுகளில் மலேசியா குறித்து எதிர்மறையான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக மலேசியாவில் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக அவர் பொய் பிரச்சாரம் செய்திருப்பதாகவும் அஷ்ராப் தெரிவித்தார். இதுநாள் வரை வெளிநாடுகளில் மலேசியா குறித்து வெளியிட்ட எந்த ஒரு கருத்துக்கும் வேதமூர்த்தி மன்னிப்பு கேட்டதில்லை. நாட்டில் இனம், மதம் மற்றும் ஒற்றுமைத் தொடர்பான விவகாரங்களில் சிறப்பாக செயல்பட தவறிய வேதமூர்த்தி, பதவி விலக வேண்டும் என்பதில் அம்னோ இளைஞர் பிரிவு உறுதியாக இருப்பதாக அஷ்ராப் கூறினார்.

இதற்கு முன்னர் ஹிண்ட்ராப் போன்ற அமைப்புகளுக்கு வேதமூர்த்தி தலைமையேற்றிருப்பதால், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் , ஒற்றுமைத் தொடர்பான விவகாரங்களில் அவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்  என்று அவர் மேலும் தெரிவித்தார். வெளிநாடுகளில் மலேசியாவை சிறுமைப்படுத்தியதற்காக அவர் மலேசியர்களிடம் பொது மன்னிப்பைக் கோர வேண்டும் என்றும் அஷ்ராப் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன