சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > `டப்பிங் யூனியிலிருந்து சின்மயி நீக்கப்பட்டதுக்கு இதுதான் காரணம்’
இந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்

`டப்பிங் யூனியிலிருந்து சின்மயி நீக்கப்பட்டதுக்கு இதுதான் காரணம்’

சின்மயி, டப்பிங் யூனியனிலிருந்து உறுப்பினர் சந்தா கட்டாததால் தான் நீக்கப்பட்டார் என்ற கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து முழுமையான விவரங்களை அறிய, தமிழ்நாடு டப்பிங் யூனியன் இணை செயலாளர் ராஜேந்திரனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், ” சின்மயி டப்பிங் யூனியன்ல இருந்து நீக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதுக்கு சின்மயி சொல்றமாதிரி வருடா வருடம் யூனியன் உறுப்பினர்கள் யுனியனுக்கு செலுத்த வேண்டிய சந்தாவை இரண்டு வருஷமா கட்ட தவறியது மட்டுமில்லை.

அவர் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் “தமிழ் நாடு டப்பிங் யூனியலில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது” என்று யூனியன் நிர்வாகத்தை எதிர்த்துப் பேசியுள்ளார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதற்கும் அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்தே உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டார். எந்த உறுப்பினருக்கும் சந்தா கட்ட நினைவூட்டும் வழக்கம் யூனியனில் இருந்ததேயில்லை. ஜனவரி 31ம் தேதிக்குள் புது வருடத்திற்கான சந்தாவைக் கட்டியாக வேண்டும் என்று உறுப்பினர் அட்டையிலேயே போடப்பட்டிருக்கும்” என்றார்..

முன்னதாக சின்மயி, இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன்.நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என இதனால் மெம்பர்ஷிப் ரத்துசெய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது.” என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ” மீடூ விவகாரத்தில் தனது குரல் ஓங்கியதன் விளைவாகத்தான் தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியால் தான் நீக்கப்பட்டுள்ளேன். எனது சந்தாவாக 5 லட்சம் கேட்கப்பட்டது. யூனியன் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நான் சந்தா செலுத்தத் தேவையில்லை தனக்குக் கூறப்பட்டது அதனால்தான் கட்டவில்லை. தன் சம்பளத்தில் இருந்து க்ஷ்10% யூனியனுக்கு ரொக்கமாகச் சென்ற பணத்துக்கு எந்த ஒரு ரசீதும் தரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

 

நன்றி : ஆனந்த விகடன் 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன