கோலாலம்பூர், நவ 19

விமான நிலைய விதிமுறைகளை நாடாளுமன்ற மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மீறிவிட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் குணசீலன் ராஜூ தெரிவித்தார்.

விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான அறைக்குள் செல்லும் போது சிலிப்பர் அணிந்து சென்றதாகவும் டான்ஸ்ரீ விக்கேஸ்வரன் விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு ஒரு ஆண் பாதுகாவலர் இல்லாமல் பெண் பாதுகாவலர் மட்டுமே இருந்திருக்கிறார். அங்கு ஆண் பாதுகாவலர் இருந்திருந்தால் இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று குணசீலன் குறிப்பிட்டார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது மகளை வழியனுப்பி வைப்பதற்கே விமான நிலையம் வந்திருக்கிறார். இது அவர் மீது வீண் பலி சுமத்துவது போல் உள்ளது என்று குணாளன் நேற்று வெளியிட்ட அறிக்கையின் வழி சுட்டிக் காட்டியுள்ளார்.

அண்மையில், ஸ்தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் பிங் விமான நிலையத்தில் பிரமுகர்கள் வளாகத்தில் கூச்சலிட்டு பிரச்னையைத் செய்தார். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவ்வாறு இருப்பின், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீது மட்டும் அவ்வாறு வீண் பலி சுமத்துவது ஏன் என்று குணசீலன் ராஜூ கேள்வி எழுப்பினார்.

கால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததால்தான் சிலிப்பர் அணிந்துச் சென்றதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.