வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தலைவர்கள் சுய லாபத்திற்கு சொத்துகளைச் சேர்த்தால் மக்கள் பாதிக்கப்படுவர் -சுல்தான் நஸ்ரின்
அரசியல்முதன்மைச் செய்திகள்

தலைவர்கள் சுய லாபத்திற்கு சொத்துகளைச் சேர்த்தால் மக்கள் பாதிக்கப்படுவர் -சுல்தான் நஸ்ரின்

புத்ரா ஜெயா, நவ. 20
தலைவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக சொத்துகளைச் சேர்த்தால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என துணைப் பேரரசர் சுல்தான் நஸ்ரின் ஷா தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் நேர்மையற்ற முறையில் சொத்துகளைச் சேர்ப்பது மக்களுக்குச் செய்யும் தீங்காகும். இதன் மூலம் மக்கள் ஏழ்மை நிலையைதான் அடைவார்கள் என புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடந்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டப் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 2ஆம் தேதியிலிருந்து சிகிச்சையினால் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பேரரசர் சுல்தான் முகமட் vக்குப் பதிலாக, சுல்தான் நஸ்ரின் ஷா இடைக்கால பேரரசராகப் பணியாற்றி வருகிறார் என்பது குற்ப்பிடத்தக்கது.

தலைவர்கள் சொத்துகளைக் கொள்ளையடிப்பது தொடர்ந்தால் நாட்டின் மேம்பாடு வீழ்ச்சியடையும். வேலையில்லா பிரச்னை அதிகரிக்கும். ஊழல் நடவடிக்கைகள் உட்பட சமூகச் பிரச்னைகள் பெருகவும் வழி வகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அரசு எந்தவொரு ஒப்பந்தத்தைச் செய்தாலும், அது அனைத்துச் சாராரின் ஒப்புதலுடன் செய்ய வேண்டுமென்றும் சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக் கொண்டார்.

மேலும் நாட்டில் அமைதியும், சுபிட்சமும் நல்லிணக்கமும் மலர நாட்டுத் தலைவர்கள் பாடுபட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன